காதலிக்க வலியுறுத்தி பெண்ணின் வீட்டிற்கு வந்த ஒரு தலைக் காதலனை பெண் உட்பட குடும்பமே கொலை செய்ததாக வெளியான செய்தி, தமிழகத்தையே திடுக்கிட வைத்தது.
சிதம்பரம் வ.உ.சி தெருவை சேர்ந்தவர் 21 வயதுஅன்பழகன். இவர், அரங்கநாதன் தெருவில் வசிக்கும் 10ஆம் வகுப்பு படிக்கும் கவிதாவை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) விரும்பினார். கவிதா குடியிருக்கும் வீட்டுக்கு அன்பழகன் அடிக்கடி வந்ததால், வீட்டின் உரிமையாளர் இந்த பையன் யார் என்று கேட்டபோது அவன் எனது நாத்தனார் பையன் எனது மகளை அவனுக்கு தான் கட்டிகொடுக்க வுள்ளதாக கூறியுள்ளார் கவிதாவின் தாய் சத்தியா.
குடிப்பழக்கம் கொண்ட அன்பழகன், கடந்த 6 மாதங்களாக கஞ்சா மாத்திரை பழக்கத்துக்கும் ஆளாகிவிட்டார். சொன்னதையே திரும்பி திரும்பி பேசுவது, தன்னிடம் கவிதா பேசாவிட்டால் கையில் பிளேடால் கீறிகொள்வது, வழக்கத்துக்கு மாறாக தலைமுடியை வெட்டிக்கொள்வது உள்ளிட்ட செயலால் கவிதா அவனிடம் பேசமறுத்துள்ளார். இதுகுறித்து வீட்டில் கூறவும் குடும்பத்தினர் அவனை வீட்டுப்பக்கம் வரகூடாது என்று எச்சரித்துள்ளனர். அதையும் மீறி அவன் வந்தபோது சிதம்பரம் காவல்நிலையத்தில் புகார் கூறி கண்டித்து அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அன்பழகன் கவிதா செல்போனுக்கு ரீசார்ஜ் செய்து வந்தநிலையில் அவனைவிட்டு விலகி செல்லும் காலங்களில் வேறு ஒருவர் மூலம் ரீசார்ஜ செய்வதை அறிந்த அன்பழகன் கவிதா தெருவில் வரும் போது நிறுத்தி என்னை மாற்றிவிட்டு தற்போது ரீசார்ஜ் செய்பவனுடன் தொடர்பு வைத்திருக்கிறாயா? என ஆபாசமாக கேட்டு அப்படி எதுனா நடந்தா உன்னை தெருவிலே வைச்சி கொன்னுவிடுவேன் என்று மிரட்டி கன்னத்திலே அடித்துள்ளார்.
இதனை பெற்றோர்களி டம் கவிதா கூற இவனை இப்படியே விட்டா சரிபட்டு வராது என எண்ணியவர்கள் கவிதாவையே செல்போனில் பேச வைத்து அன்பழகனை கடந்த 5ந் தேதி வெள்ளிக்கிழமை பகலில் அழைத்துள்ளனர். அன் பழகனும் காலை 10 மணிக்கு மேல் அவரது இருசக்கர வாகனத்தை அதே நகரில் மறைவான இடத்தில் நிறுத்திவிட்டு கவிதா வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது கஞ்சா மாத் திரை போதையில் இருந்த அவர் கவிதாவிடம் தகாத முறையில் நடந்துகொண்டுள்ளார். மேலும் அவரது அம்மாவையும் தவறாக பேசியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கவிதாவின் அண்ணன், அன்பழகனை கத்தியால் தலையில் வெட்டியுள்ளார். கீழேவிழுந்தவன் காலை கவிதா பிடித்துக்கொள்ள அவரது அம்மா தலையணையை முகத்தில் வைத்து அமுக் கியதால் இறந்ததாக கவிதாவின் நெருங்கிய உறவினர்கள் கூறுகிறார்கள். அன்பழகனின் செல்போனில் கவிதாவின் ஆபாச படங்கள் இருந்ததால் அதனை கவிதாவின் அண்ணன் செல்போனை தீயிட்டு எரித்ததாகவும் கூறினார்கள்.
இதனைத் தொடர்ந்து வேலையில் இருந்த அப்பாவை அழைத்துவந்த மகன் நடந்ததை கூறியுள்ளார். அவரும் உடலை வந்து பார்த்து கையை கட்டி உடலை தரைவிரிப்பில் சுற்றிவைத்துவிட்டு இரவு எங்காவது போய் போட்டுவிடலாம் என்று குடும்பத்துடன் திட்டம் தீட்டியுள்ளனர்.
அப்போது மாலை 3 மணிக்கு மேல் வீட்டின் உரிமையாளர் இரண்டாவது மாடியில் இருக்கும் கவிதா விட்டுக்கு சென்றபோது கவிதா மற்றும் அவரது அம்மா சத்தியா, எப்போதும் போல் சகஜமாக பேசியுள்ளனர். மேலும் வீட்டு போர்டிகோவில் துணிதுவைத்து காய வைத்துவிட்டு. தலையை சீவிகொண்டு எந்த சந்தேகமும் வராமல் இருந்துள்ளனர். இந்நிலையில் தான் இரவு 9 மணிக்குமேல் தகவல் சிதம் பரம் டவுன் போலீசுக்கு கசிய உடலை கைப்பற்றி கவிதா உள்பட குடும்பத்திலுள்ள 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதில் இருவர் சிறார் என்பதால் அவர்கள் சிறார் பள்ளிக்கு அனுப்பப் பட்டுள்ளனர்.
சிதம்பரம் நகரத்தில் பேருந்துநிலையம், முத்தையா பாலிடெக்னிக் பகுதிகள், கோவிந்தசாமி தெரு, அண்ணாதெரு, வ.உ.சி தெரு, சுப்பிரமனி யன் தெரு, காரியபெருமாள் கோவில் தெரு, காரியபெருமாள் குளக்கரை உள்ளிட்ட பகுதிகளில் 20 வயதுக்குள் இருக்கும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் கஞ்சா போதையை தாண்டி மாத்திரை வடிவில் உள்ள போதை பொருளை பழக்கி வருகிறார்கள். தற்போது காதலி வீட்டில் இறந்த இளைஞரும் போதை மாத்திரை பழக்கத்தால் பாதை மாறியதால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் இளைஞர் சமூதாயமே சீரழிவை நோக்கி செல்கிறது இதனை தடுக்க இரும்பு கரம்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.
போதை மாத்திரை குறித்து சிதம்பரம் காவல் அதிகாரி ஒருவரோ போதை மாத்திரை இருப்பது உண்மைதான். ஆனால் அது இங்கு விற்பது இல்லை. விருத்தாச்சலம் பகுதியில் விற்பதை சிலர் வாங்கி வந்து நண்பர்களிடம் கொடுத்துவிடுகிறார்கள். நண்பர்களின் வேண்டுகோளை ஏற்று போதை மாத்திரை ருசித்தவர்கள் அந்த பழக்கத்திற்கு அடிமையாகிவிடுகிறார்கள். நாங்களும் இதுபோல் உள்ளவர்களை பிடித்து விசாரித்த போது மாத்திரைகள் சிக்கவில்லை. மாணவர்களை பெற்றோர்கள் விட்டில் கவனித்து வளர்க்கவேண்டும் என்று அறிவுரை வழங்குவது போல் பேசினார்.
தமிழகம் முழுவதுமே கஞ்சா உள்ளிட்ட போதைகளுக்கு பரவலாக ஆளாகியுள்ளனர் மாணவர்களும் இளைஞர்களும். அதன் கொடூர விளைவுதான கவிதா வீட்டில் நடந்தது.
-காளிதாஸ்